|
|
 |
புதிய சிந்தனைகளையும் புதிய கண்ணோட்டத்தையும் மாறுபட்ட கோணத்தில் படைப்பதையே நோக்கமாகக்கொண்டு 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சந்தியா பதிப்பகம், அதே நோகத்துடன் தொடர்ந்து இயங்கி வருகிறது. பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் அவற்றின் இருப்பை வெகு வேக விற்பனையின் மூலம் விற்றுத் தீர்ந்ததே சந்தியா பதிப்பகத்தின் நூல்களின் முக்கியத்துவத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இலக்கியச் சிந்தனைகளையும் இன்றைய வாழ்வியலையும் இணைக்கும் பாலமாக பதிப்பகத்துறை செயல்படவேண்டுமென்கிற எண்ணத்தை அடிநாதமாகக்கொண்டு, இலக்கியச் சிந்தனையுடைய புத்தகங்களையும், வாழ்வியலோடு தொடர்புகொண்டு வாசகர்களுக்குப் வாசகப் பேரனுபவத்தைத் தருகிற புத்தகங்களையும் தொடர்ந்து பதிப்பித்து வருவதே சந்தியா பதிப்பகத்தின் சாதனையாகும். பதிப்புலகில் தென்றலும் வீசவேண்டும்; தேவையான பொழுது புயலும் வீச வேண்டும் என்ற எண்ணம் கொண்டு சிறந்த கவிதைகள், கட்டுரைகள், வரலாற்று நூல்கள், இந்திய மறும் உலகப் புரட்சி எழுத்தாளர்களின் வீச்சுப் படைப்புகள் என்று சந்தியா பதிப்பகத்தின் நூல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமில்லாமல் உலக எழுத்தாளர்களின் படைப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது சந்தியா பதிப்பகம்.
சந்தியா பதிப்பகத்தின் பதிப்புகளில் புதுமைப்பித்தன் கதைகள், க.நா.சு.வின் உலக இலக்கிய மொழிபெயர்ப்பு, வ.உ.சி.நூல் திரட்டு போன்ற நூல்கள் 2002-ம் ஆண்டில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. திரைப்பட மேதை அகிரா குரோசாவா மற்றும் எம்.டி.வாசுதேவன் நாயரின் மூன்று திரைக்கதைகள், கனவில் எரிந்த கலைஞன் குருதத் போன்ற நூல்கள் உலத் திரையில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த இலக்கிய முயற்சியின் நூல் வடிவங்களாகும். மலையாள இலக்கிய உலகின் பிதாமகர்களில் ஒருவரான வைக்கம் முகமது பஷீரின் பத்து நூல்களும், சக்கரியாவின் படைப்புகளும் பெரும் வரவேற்பைப் பெற்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களாகும். மேல்நாட்டு நூல்களிலிருந்து மொழிபெயர்ப்பு என்கிற வரிசையில் வான்கா ஏகோபித்த பாராட்டைப் பெற்ற நூலாகும். இந்தியாடுடே மற்றும் குமுதம் உள்ளிட்ட சஞ்சிகைகள் வான்காவை பெரிதும் பாராட்டின. சிறிய நூல் வரிசையில் "நான் நாத்திகன் ஏன்?", கப்சிப்தர்பார், ஆலயம்-அர்ச்சகர்-தீர்ப்புகள், ஹிந்தி பொதுமொழியா போன்ற நூல்கள் சென்னை புத்தக கண்காட்சி விற்பனையில் பெரும் சாதனையை ஏற்படுத்தின.
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்"
- என்ற பாரதியின் எண்ணம்போல் வேற்று மொழி இலக்கியங்களை நாவல்களை மொழிபெயர்த்து பதிப்புலகில் மேலும் ஒரு அடிச்சுவட்டை சந்தியா பதிப்பகம் ஏற்படுத்தியிருக்கின்றது. தொடர்ந்து பல்வேறு துறை நூல்களையும் வெளியிட சந்தியா பதிப்பகம் தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது.
சந்தியா பப்ளிகேஷன்ஸ் வெளியிடும் புத்தகங்களை இணையத்தில் விற்பதற்கு முன்னுரிமை பெற்ற விற்பனையாளர் (Preferred Vendor) AnyIndian.com என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சந்தியாவின் அனைத்துப் புத்தகங்களும் AnyIndian.com-ல் கிடைக்கும். |
 |
| Available Books from this Publisher Sandhya |
 |
|
|
|