|
| அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் |
 |
|
 |
|
1. AnyIndian.com-ஐப் பற்றி:
AnyIndian.com என்கிற மின்வர்த்தகத் தளம், The Pro-Found Company-ன் ஒரு பிரிவாகும். AnyIndian.com-ன் அலுவலகம் சென்னையில் உள்ளது. அதன் அலுவலக முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல் ஆகியவற்றை இம்மடலின் இறுதியில் காணலாம்.
AnyIndian.com-ன் பெரும்பாலான பக்கங்கள் (பொருட்கள் பட்டியல், பொருட்களின் பக்கங்கள் உள்ளிட்டப் பல பக்கங்கள்) ஆங்கிலம் மற்றும் தமிழ் என்று இருமொழிகளில் காணக் கிடைக்கின்றன. இது தமிழர்களுக்கும் தமிழ்ப் புத்தக வாசகர்களுக்கும் மிகவும் பயனளிக்கக் கூடிய விஷயமாகும்.
மின்வர்த்தக வசதிக்காகவும் சில இடங்களின் சட்டங்களைப் பூர்த்தி செய்யும் முகமாகவும் - அனுப்பும் முறை, திருப்பியனுப்பும் முறை, பயனர் ஒப்புதல், பயனர் விவரப் பாதுகாப்பு முதலிய வெகு சில பக்கங்களே ஆங்கிலத்தில் மட்டும் உள்ளன.
2. AnyIndian.com-ல் கிடைக்கும் பொருட்கள் யாவை?
AnyIndian.com மூலமாகப் புத்தகங்கள், கைவினைப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவற்றை இணையம் வழியாக விற்கவிருக்கிறோம்.
அதன் முதல்படியாக, தஞ்சாவூர் ஓவியங்கள் விற்பனையை இப்போது தொடங்கியிருக்கிறோம். உங்கள் நல்லாதரவுடன், விரைவில் கைவினைப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவற்றின் விற்பனையையும் தொடங்க உத்தேசித்துள்ளோம்.
3. எந்த மாதிரியான புத்தகங்கள்?
AnyIndian.com-ன் நோக்கம் எல்லாத் தமிழ்ப் பதிப்பாளர்களின் எல்லாப் புத்தகங்களையும் பயனர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே. அந்நோக்கை நிறைவு செய்யும் விதமாக AnyIndian.com செயல்படும்.
AnyIndian.com புத்தகப் பட்டியலில் இதுவரை பதிமூன்றாயிரத்துக்கும் மேற்பட்டத் தமிழ்ப் புத்தகங்கள் உள்ளன. ஆன்மீகத்திலிருந்து அறிவியல் வரை, சிறுவர் நூல்களிலிருந்து சோதிடம் வரை, நாட்டுப்புறவியலிலிருந்து நவீன இலக்கியம் வரை, சினிமாவிலிருந்து சீனி.விசுவநாதன் வரை, கவிதையிலிருந்து கணினி வரை, தலித்தியத்திலிருந்து பெண்ணியம்வரையான புத்தகங்கள் அவற்றுள் அடங்கும்.
இதுவரை வெளியாகி விற்பனையில் உள்ள - அன்னம் அகரம், அருணோதயம், அலைகள், அல்லயன்ஸ், உ.வே.சா. நூல் நிலையம், உயிர்மை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், எனி இந்தியன் பதிப்பகம், ஐந்திணை, ஓவியா, கண்ணகி, கண்ணதாசன், கடலங்குடி, கனவுப் பட்டறை, கருப்புப் பிரதிகள், கலைஞன், கவிதா, காவ்யா, கிழக்கு, குமரன், கேலக்ஸி, கோமதி, க்ரியா, சதுரம், சந்தியா, ஏசிகேஎஸ், சாளரம், சீனி விசுவநாதன், தமிழினி, தமிழ் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பகம், தமிழ்க்கோட்டம், தமிழ்ப்புத்தகாலயம், தமிழ் மண், திராவிடன் புத்தக நிலையம், திருமகள் நிலையம், திருவரசு புத்தக நிலையம், த்வனி, நர்மதா, நவீன விருட்சம், நிழல், பாரி நிலையம், பிரேமா பிரசுரம், புதுப்புனல், புதுவிசை, பூக்குட்டி பதிப்பகம், பூம்புகார், பூங்கொடி, மக்கள் வெளியீடு, மதி நிலையம், மருத | |